இலவசம்னா நாலு யானையா குடுங்க

மக்கா! நல்லா இருக்கியளா?
நலல இருங்கடே!!

எங்கூருல ஒரு கத சொல்லுவாங்க.
ஒருத்தனுக்கு சோத்துக்கே வழியில்லாம கெடந்தானாம்.
அப்ப அவன் இருக்குற தெரு வழியா ஒருத்தன் ' அங்குசம்
வாங்குனா யானை இலவசம்'ன்னு கூவிக்கிட்டே போயிருக்கான்.

படுத்துக் கெடந்த சவத்து மூதி சும்மா கெடந்து தொலைச்சிருக்கலாம்லா?
'எலே! யானையில்லா எலவசமா குடுக்கானுவ. சவத்த நாமளும் ஒண்ணு ரெண்டு
வாங்குனா என்னன்னு அந்தமாட்டுக்கு எந்திரிச்சு வெளில ஓடிப் போய் நாலு யானையா
வாங்கிட்டு வந்திருக்கான்.

அவன் பொண்டாட்டிகாரி தண்ணியெடுக்க வெளியில போயிட்டு வந்தவ வீட்டு முன்னால
நாலு யானை கெட்டி போட்டுருக்குறதப் பாத்து 'என்ன எழவுவே இது?'ன்னு கேட்டிருக்கா.
உடனே அவன் 'ஏமுட்டி இப்படி கத்துத? அது எலவசமா கெடச்சதுல்லா? அதான் ஒண்ணுக்கு
நாலா வாங்கிப் போட்டிருக்கேன்'ன்னு பெருமையா சொல்லியிருக்கான்

சோத்துக்கு வழியில்லாட்டியும் இந்த கெரவத்துக்கு மட்டும் ஒரு மசுரும் கொறச்சல் இல்ல
என்று முணுமுணுத்துக் கொண்டே போனாளாம் அவள்

எதுக்கு இந்தக் கதயச் சொல்லுதம்னா,
இணையத்துல பதிவு எழுதுதக்கு இலவசமா இடம் கொடுக்கானுவன்னு தெரிஞ்சுதுன்னா உடனே
ஆளாளுக்கு அடிச்சு புடிச்சு பட்டாவைப் போட்டுடுதுதானுவ. அதோட ஒழியுதான்னா அதுவும் இல்ல
அவனவன் மின்னஞ்சலுக்குக் கீழே என்னமோ படிச்சு வாங்குன பட்டம்மாதிரி மைல் நீளத்துக்கு
பதிவு பேரு வேற போட்டுக்கிடுதானுவ.

சனியன் சொன்னா எவன் கேக்கான்? சரி அபப் நாம் மட்டும் சும்மா எதுக்குக் கெடக்கணும்னு
ஒரு பட்டாவை போட்டு வச்சுப்புட்டேன்

எழுதச்சரக்கு இருக்கோ இல்லையோ, ஓசில குடுத்தா ஆசிடையும் குடிப்போம்லாடே?!
நல்லா இருங்கடே!

உங்களுக்கும் பட்டா வேணும்னா இங்குட்டு சொடுக்கிட்டு நல்லா இருங்க!